ஓமலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகள் மற்றும் அதிமுக ஆட்சியில் செய்த திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மணி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. தர்மபுரி மெயின் ரோடு, கடைவீதி உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களிடத்தில் அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறி செய்யாத திட்டங்கள் குறித்தும் துண்டு பிரசுரங்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.