ஓமலூரில் அதிமுக. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர், பொறுப்பாளர்கள், பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மணி எம்.எல்.ஏ. வரவேற்றார். சந்திரசேகர் எம்.பி. முன்னிலை வகித்தார். 

சேலம் மாவட்ட பொறுப்பாளர் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் பொன்ராஜ், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கி பேசினர். கூட்டத்தில் கடந்த தேர்தலைவிட அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைய நிர்வாகிகள் பாடுபட வேண்டும். நிர்வாகிகள், பாக கிளை முகவர்கள் வீடு வீடாகச் சென்று திண்ணை பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். 

தி.மு.க. ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், சட்டம் ஒழுங்கு ஆகியவை குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். 2026 தேர்தலில் தமிழகத்திலேயே ஓமலூர், மேட்டூர் சட்டமன்றத் தொகுதி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று மாவட்ட செயலாளர் இளங்கோவன் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல் விக்னேஷ், கலையரசன் மற்றும் ஓமலூர், மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர செயலாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி