ஓமலூர் அருகே தனியார் பள்ளி பஸ்சில் திடீர் தீ

ஓமலூர் அடுத்த கருப்பூர் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளி பஸ், மாணவ-மாணவிகளை இறக்கிவிட்ட பிறகு தொன்னப்பள்ளி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும், தீவிபத்தில் பஸ்ஸின் இருக்கைகள் எரிந்து, கண்ணாடிகள் உடைந்தன. இச்சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி