இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் காதலன், ஸ்ரீதரை மிரட்டி உள்ளார். இதனிடையே அந்த மாணவி ஸ்ரீதரிடம் பேசுவதை குறைத்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஸ்ரீதர் விசாரித்த போது அந்த மாணவிக்கும், முன்னாள் காதலனுக்கும் நிச்சயம் நடந்தது தெரிய வந்துள்ளது. இதனால் ஸ்ரீதர், அந்த மாணவியிடம் தான் கொடுத்த நோட்டு புத்தகம், ஹால் டிக்கெட் மற்றும் பணம் ஆகியவற்றை திரும்ப கேட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவியின் முன்னாள் காதலன் ஸ்ரீதருக்கு போன் செய்து பணம் மற்றும் நோட்டு புத்தகத்தை வாங்கி செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஸ்ரீதர் அங்கு சென்றபோது மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் கத்தியால் ஸ்ரீதரை வெட்டியுள்ளனர். இதில் காயமடைந்த ஸ்ரீதர் ஓமலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் காதலன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.