சேலம் கருப்பூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஹைடெக் தொழிற்சாலை செயல்ப டாமல் உள்ளது. இதை பயன்படுத்தி சிலர் தொழிற்சாலைக் குள் சென்று பழைய இரும்புகள் திருடுவதாக கருப்பூர் போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்றனர். அங்கு ஒரு லாரியில் பழைய இரும்பு பொருட்களை சிலர் ஏற் றிக் கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர். 3 பேர் போலீசில் சிக்கினர். அதாவது, கோட்ட கவுண்டம்பட்டி பகுதி சேர்ந்த கிரிதரன் (வயது 32). டோனி (எ) சரவணன் (24), ஓமலூர் அருகே கருப்பனம்பட்டியை சேர்ந்த விஜயகாந்த் (32) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.