அவர், கடந்த 10 நாட்களாக சங்கீதப்பட்டியில் தங்கியிருந்ததாக தெரிகிறது. நேற்றுமுன்தினம் மேல்மொரப்பம்பட்டியில் உள்ள வீடு திறந்துகிடப்பதாக பாலசுப்பிரமணிக்குத் தகவல் வந்தது. அவர் அங்குச் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணி வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோவில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி, 4½ பவுன் தாலிக்கொடி, 1½ பவுன் தோடு, ரூ.10,000 ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
மேலும் வீட்டின் சமையலறையில் இருந்த யு.பி.எஸ். பேட்டரி, டி.வி., கியாஸ் அடுப்பு, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவை அள்ளிச்செல்லப்பட்டிருந்தன. இந்தச் சம்பவம் தொடர்பாக பாலசுப்பிரமணி ஓமலூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.