சேலம் டவுன் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

சேலம் டவுன் கோட்டை மைதானம் பகுதியில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து டவுன் போலீசார் கோட்டை மைதான பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கொண்டலாம்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பதும் அவர் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரிந்தது. மேலும் அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் கார்த்திகை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி