மேட்டூர் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் பலி

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே வெள்ளார் ஊராட்சி சென்றாய ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்குமார். இவரது மனைவி தீபா (வயது 26). இவர் நேற்று மாலை மேச்சேரியில் இருந்து தொப்பூர் நோக்கி மோப்பெட்டில் சென்று கொண்டு இருந்தார். காளிக்கவுண்டனூர் அருகே சென்றபோது தொப்பூர் பக்கம் இருந்து வந்த கார், மோப்பெட் மீது மோதியது. 

இந்த விபத்தில் தீபா தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே தீபா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி