மேட்டூர் அருகே கொளத்தூரைச் சேர்ந்த சுப்பிரமணியின் மனைவி ரேவதி, உடல்நலக் குறைவால் மாத்திரைகள் உட்கொண்டு வந்த நிலையில், நேற்று (மே 17) அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பவில்லை. தேடுதல் வேட்டையின் போது, அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட சடலம் ரேவதியினுடையது என்றும், அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்தது. கொளத்தூர் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.