இதில் தூக்கி வீசப்பட்ட ரஞ்சித் குமார் லேசான காயங்களுடன் தப்பினார். பின்னால் அமர்ந்திருந்த கோவிந்தனுக்கு தலை உள்பட பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்ட அந்த பகுதியினர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அவர் நேற்று முன்தினம் (ஜனவரி 14) பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு