அனல்மின் நிலையத்தில் கன்வேயர் பெல்ட் அறுந்து தொழிலாளி பலி

மேட்டூரை அடுத்த தொட்டில்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (38) என்பவர், மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். 30 அடி உயரத்தில் கன்வேயர் பெல்ட் பகுதியில் பணிபுரிந்தபோது, திடீரென பெல்ட் அறுந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். மீட்கப்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி