சேலம்: வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி பா. ஜனதா சார்பில் நல உதவிகள்

சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றிய பா. ஜனதா கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் விழா நங்கவள்ளி ஒன்றியம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் வாஜ்பாய் உருவப்படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நல உதவிகள் வழங்கியும் கொண்டாடினர். அந்த வகையில், சூரப்பள்ளியில் 100 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ வீதம் அரிசி வழங்கும் நிகழ்ச்சி கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் வனவாசி அரிராமன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம். பி. யுமான கே. பி. ராமலிங்கம் கலந்து கொண்டு தலா 10 கிலோ அரிசியை 100 குடும்பங்களுக்கு வழங்கினார்.விழாவில், மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி