மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது பாசனப் பகுதிகளில் தண்ணீர் தேவை குறைந்ததால், நேற்று முதல் வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்திற்கு தொடர்ந்து வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.