மேட்டூர் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 239 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 911 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேலும், நீர்வரத்து வினாடிக்கு 1,000 கனஅடிக்கு மேல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்புள்ளது. தற்போது குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் தற்போது 78.95 அடியாக உள்ளது.