சேலம் புதிய பேருந்து நிலையத்தில், அதிக மதுபோதையில் இருந்த வாலிபரிடம் அமர்ந்த திருடன், அவரது பர்ஸை திருடி, பணத்தை எடுத்துக்கொண்டு, ஹெல்மெட்டால் முகத்தில் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் இருந்த இளைஞர் தற்காத்துக் கொள்ள முடியாமல் தவித்துள்ளார். பேருந்தில் இருந்த ஒருவர் எடுத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.