சேலம் சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் போக்சோவில் கைது

சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தருண்குமார் (வயது 21) என்ற வாலிபர் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் தருண்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி