அந்த வகையில், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தலைமையில் அண்டை மாநிலமான கர்நா டக மாநில காவல்துறையினருடன் கலந்துரையாடல் கூட்டம் சேலம் மாவட்டம், மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம், ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமு ருகன், மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மரியமுத்து, கர் நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ் மற்றும் இரு மாநில எல்லையோர காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.