போக்குவரத்து விதிகளை மீறிய அரசு பேருந்து ஓட்டுநர்: சமூக ஆர்வலர்கள் கண்டனம்

சேலம் டால்மியா போர்டு பகுதியில், சேலத்தில் இருந்து மேட்டூர் வழியாக மாதேஸ்வரன் மலைக்குச் சென்ற அரசு பேருந்தின் ஓட்டுநர், இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும் பாதையில் பேருந்தை இயக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவத்தால் போக்குவரத்து விதிகளை மதிக்காத ஓட்டுநர் மீது வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் சேலம் நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி