சேலம் மாவட்டம் மேட்டூர் குமரன்நகர் பகுதியைச் சேர்ந்த கேசவன்-சரண்யா தம்பதியினரின் 14 வயது மகள் விகாஷினி, மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விகாஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது பாட்டி கதவைத் தட்டிப் பார்த்தபோது திறக்கப்படாததால், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது விகாஷினி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தார்.