மேட்டூர் அருகே உள்ள பொறையூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 24). இவர் மேட்டூர் பஸ் நிலையம் அருகே தள்ளுவண்டியில் சிப்ஸ் விற்பனை செய்து வருகிறார். நேற்று (நவம்பர் 28) கடைக்கு வந்த கார்த்திக் (29) என்பவர் ரவுடி என்று கூறி கத்தியைக் காட்டி மிரட்டி சதீஷ்குமாரின் பாக்கெட்டில் இருந்த ரூ. 650 பறித்துச் சென்றார். இதுகுறித்து சதீஷ்குமார் மேட்டூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி கார்த்திக்கை கைது செய்தனர்.