கெங்கவல்லி இருதரப்பு மோதல் விவகாரம் காவல் நிலையம் முற்றுகை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஜல்லிக்கட்டு காளை சீறி பாய்ந்ததில் இருசக்கர வாகனம் சேதமடைந்ததை தொடர்ந்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பட்டியலின இளைஞரை தாக்கியதாக தமிழக வெற்றிக்கழக நகர செயலாளர் அருண் உட்பட 15 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், த.வெ.க. நிர்வாகி உட்பட பலரை கைது செய்யாமல் இருப்பதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

தொடர்புடைய செய்தி