சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே சவேரியார் பாளையத்தைச் சேர்ந்த வித்யஸ்ரீ (16) என்ற மாணவி, தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் பாட்டியின் கண்டிப்பால் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.