பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த மாதம் வரை மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு மேல் நீடித்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக நீர்மட்டம் 90 அடிக்கு கீழ் குறைந்து வருகிறது. இதனால், அணையின் நீர்மட்டப் பகுதிகளில் உள்ள வண்டல் மண்ணை எடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சதாசிவம் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும், அணையின் கொள்ளளவும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.