மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளர்கள் நலச்சங்க கூட்டம்

மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளர் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம் கலந்துகொண்டு நோயாளிகளுக்கு தரப்படும் சிகிச்சைகளின் தரத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனை வழங்கினார். 

இதில் மேட்டூர் உதவி கலெக்டர் பொன்மணி, டெல்லி மேல்சபை எம்.பி. சந்திரசேகரன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் நந்தினி, மேட்டூர் தாசில்தார் ரமேஷ், மேட்டூர் நகராட்சி தலைவர் சந்திரா, மருத்துவமனை கண்காணிப்பாளர் இளவரசி, மேட்டூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி