சேலம்: அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே பொட்டனேரி ஊராட்சி குள்ளமுடையானூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகளை சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். 

இதையொட்டி குள்ளமுடையானூர் அரசு பள்ளியில் நடந்த விழாவில், சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, பள்ளி மாணவிகளுடன் இணைந்து குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில், மேச்சேரி ஒன்றிய தி. மு. க. செயலாளர் சீனிவாச பெருமாள், பொட்டனேரி ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகேசன், ராமநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி