சேலம்: கோர்ட்டு உத்தரவை மதிக்காத பேரூராட்சி செயல் அலுவலருக்கு சிறை

சேலம் மாவட்டம் நங்கவள்ளி பேரூராட்சியில் 2017-ல் செயல் அலுவலராகப் பணியாற்றிய மேகநாதன், ராஜம்மாள் என்பவரின் வணிக நிறுவனத்தின் முன்பு இருந்த இடங்களை ஆக்கிரமிப்பு எனக்கூறி பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி பொருட்களை சேதப்படுத்தியுள்ளார். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்டதாகக் கூறி, ஓய்வு பெற்ற மேகநாதனுக்கு 3 மாத சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி