சேலத்தில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி மகன் கண் முன் தாய் பலி

சேலம் பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து இன்று காலை பேளூரை நோக்கிச் சென்ற அரசு பேருந்து, அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு குருவாயூரப்பன் கோவில் சாலை வழியாகச் சென்றபோது, முன்னால் சென்ற தனியார் ஐடி ஊழியர் ஹரிஷ் ராகுல் மற்றும் அவரது தாய் சுதா ஆகியோர் சென்ற டூவீலரில் மோதியது. இதில் சுதாவின் தலை பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் கண் முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மாபேட்டை போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி