சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ராமன் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 60). இவர் கருமலைக்கூடல் போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: - மேட்டூர் புதுச்சாம்பள்ளி பகுதியை சேர்ந்த ராஜாராம் மற்றும் அவருடைய மனைவி கவிதா. இவர்கள் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் எனக்கும், அவர்களுக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு இவர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தனியார் (ஐ.டி.ஐ.) தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கியுள்ளதாகவும், இதில் என்னை பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாகவும் கூறி ரூ.15 லட்சம் பெற்றனர்.
பல ஆண்டுகள் ஆகியும் அவர்கள் என்னை ஐ.டி.ஐ.யில் பங்குதாரராக சேர்க்கவில்லை, நான் கொடுத்த பணத்தை திரும்ப தரவில்லை. இதுபற்றி பலமுறை கேட்டும் அவர்கள் பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையடுத்து ஐ.டி.ஐ.யில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி முதியவரிடம் பணம் மோசடி செய்த கணவன்-மனைவி மீது கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.