சேலம் மாவட்டம் மேட்டூர் அணை காவிரி வெள்ள உபரி நீரை திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திலிருந்து உடனே திறந்து 100 ஏரிகளை நிரப்ப கோரியும், முடிக்கப்படாத உபரி நீர் திட்டக் கால்வாய் பணிகளை விரைந்து நிறைவேற்ற கோரியும் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர், இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்தனர்.