மேட்டூர் அணை கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

கர்நாடகாவில் இருந்து நீர் திறப்பை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது. நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.95 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6,401 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், அது நேற்று மாலை 6,451 கன அடியாக அதிகரித்தது. காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18,000 கன அடியாகவும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடியாகவும் இருந்த நீர் திறப்பு தற்போது வினாடிக்கு 400 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 88.68 டிஎம்சியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி