அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் (டிசம்பர் 26) 2331 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2886 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தண்ணீர் வரத்தை விட திறப்பு மிகவும் குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 119.53 அடியில் இருந்து 119.63 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 92.88 டி எம் சியாக உள்ளது.