மேட்டூர் அணை நீர்மட்டம் 79. 35 அடியாக சரிந்துள்ள

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்படாத நிலையில், இரு மாநில எல்லை காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மாறுபடுகிறது. கடந்த இரண்டு நாட்களாக 480 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 234 கன அடியாக சரிந்துள்ளது. குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு 500 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் இன்று காலை 79.35 அடியாக சரிந்துள்ளது.

தொடர்புடைய செய்தி