தொடர்ந்து மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு நடத்தியதோடு, மேட்டூர் நகராட்சி சார்பில் ரூ. 6 கோடியே 40 லட்சத்தில் பஸ் நிலைய கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வளர்ச்சி திட்டப்பணிகள்
பின்னர் மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொட்டனேரி ஊராட்சியில் ரூ. 28 லட்சத்து 35 ஆயிரத்தில் நடைபெற்று வரும் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிகள் என மாவட்டத்தில் ரூ. 9 கோடியே 19 லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் லலித் ஆதித்ய நீலம், மேட்டூர் உதவி கலெக்டர்கள் பொன்மணி, ஆக்ரிதி சேத்தி, மேட்டூர் அணை கோட்ட செயற்பொறியாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.