மேட்டூர் கெம்ப்ளாஸ்ட்சன்மார் நிறுவனம்சார்பில் மருத்துவமுகாம்

மேட்டூரில் கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனம், ஸ்ரீகோகுலம் மருத்துவமனை மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தின. கெம்ப்ளாஸ்ட் தொழிற்சாலையின் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கிய இந்த முகாமில், 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சர்க்கரை நோய், எலும்பியல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ ஆலோசனைகளையும், இ.சி.ஜி., எக்கோ, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகளையும் பெற்றனர். பங்கேற்பாளர்களுக்கு மானிய விலையில் கண் கண்ணாடிகள், இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி