கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் துரைராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு வெற்றியடைவதற்காக பா.ம.க.வினர், வன்னியர் சங்கத்தினர் இரவு பகலாக கிராமம் தோறும் மாநாடு அழைப்பிதழை வழங்கி மாநாட்டில் கலந்து கொள்வதின் நோக்கம் குறித்து எடுத்து கூறினர்.
இதேபோல் பா.ம.க., வன்னியர் சங்கம் மற்றும் இளைஞர்கள், நெசவாளர்கள், வணிகர்கள் திரளாக மாநாட்டிற்கு திரண்டு வர வேண்டும் என்று ஒன்றிய செயலாளர் துரைராஜ் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், மகளிர் கலந்து கொண்டனர்.