மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் மாசிமக திருத்தேர்திருவிழா

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் மாசிமக திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முக்கிய நிகழ்வான சின்னத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விநாயகர் தேர், சின்னத்தேர் ஆகியவை கோவிலில் இருந்து புறப்பட்டு பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் கோவிலை அடைந்தன. இன்று (திங்கட்கிழமை) விநாயகர் தேர், பெரியத்தேரோட்டம் நடைபெறும். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு விநாயகர் தேர், பெரியத்தேர் ஆகியவை கோவிலை வந்தடையும்.

தொடர்புடைய செய்தி