மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம்

சேலம் மாவட்டம் மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் மாசிமக தேர்திருவிழா சக்தி அழைத்து கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. 

இதையொட்டி கோவிலில் இருந்து விநாயகர் தேர், சின்ன தேர் கிழக்கு கோபுரம், சந்தைப்பேட்டை, கிராம சாவடி, மேற்கு கோபுரம் வழியாக கோவிலை வந்தடைந்தது. நேற்று விநாயகர் தேரும், பெரிய தேரில் பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த நிலையில் நேற்று கோவிலில் இருந்து தொடங்கிய தேரோட்டம் கிழக்கு கோபுரம், சந்தைப்பேட்டை வழியாக மேற்கு ரத வீதி, கிராம சாவடி அருகில் நிலை நிறுத்தப்பட்டது. 

இன்று (வெள்ளிக்கிழமை) கூட்டத்தாருடன் விநாயகர் தேர், பெரிய தேர் கோவிலை அடைகிறது. நாளை (சனிக்கிழமை) இரவு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் பத்ரகாளியம்மன் தாய் வீடான பொங்கபாலியில் இருந்து திருவீதி உலாவும், சத்தாபரணமும் நடைபெறுகிறது. 17-ந் தேதி மஞ்சள் நீராட்டம் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி