மேட்டூர் ஆர்.எஸ். பகுதியில் ரோந்து சென்ற கருமலைக்கூடல் போலீசார், சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளுடன் நின்ற ரமேஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். தப்பிக்க முயன்ற அவரை பிடித்தபோது, அவர் மேட்டூர் பாரதி நகரை சேர்ந்த ரமேஷ் (55) என்பதும், மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை மறைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.