சேலம் மாவட்டம் மேச்சேரி பேரூராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைக்கு 15-வது நிதிக்குழு திட்டத்தில் ரூ. 1 கோடி 10 லட்சத்தில் 2 கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. மேச்சேரி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் சீனிவாசபெருமாள், காசி விஸ்வநாதன், பேரூராட்சி தலைவர் சுமதி, பேரூர் செயலாளர் சரவணன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி, மேச்சேரி பேரூராட்சி துணைத் தலைவர் ரேவதி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.