மேட்டூர் மால்கோ பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

மேட்டூர் மால்கோ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மழலையர் மற்றும் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மால்கோ எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சரவணன், பள்ளி தாளாளர் கண்ணன், தொழிற்சாலை மேலாளர் மணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும், பாராட்டு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கி வாழ்த்தினர். விழாவில் பள்ளி முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் மற்றும் அலுவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி