மேட்டூரில் சூறைக்காற்றில் மரம் விழுந்து சிறுமிகள் காயம்

மேட்டூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவிய கோடை வெயிலுக்குப் பிறகு, நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் செக்கானூர் ஜே. ஜே. நகர் பகுதியில் 7-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மின்தடை ஏற்பட்டது. மேலும், சூறைக்காற்றால் பழமையான மரம் முறிந்து வீட்டின் மீதும், சாலையில் சென்ற ரகுபதி மற்றும் அவரது மகள்கள் கிரிஷிதா (7), கிரிஷிகா (5) ஆகியோர் மீதும் விழுந்தது. இதில் சிறுமிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி