டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இது வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில், பாசனப் பகுதிகளில் தண்ணீர் மேலும் குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, நேற்று காலை முதல் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டு, வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்திற்கு தொடர்ந்து வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி