சேலம்: பஸ் மோதி மீன்வளத்துறை ஊழியர் பலி

சேலம் மாவட்டம் மேட்டூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ரஜினி குமார், அருகே உள்ள காவிரி பாலம் பகுதியை சேர்ந்தவர் தியாகு, இருவரும் மேட்டூர் மீன் வளத்துறையில் உதவியாளராக பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மேட்டூர் மீன் விதை பண்ணையில் மீன் குஞ்சுகளை எடுத்துச் சென்று தலைவாசல் குட்டையில் விட்டனர்.

இரவு ஏழு மணிக்கு அங்கிருந்து மேட்டூர் நோக்கி இருசக்கர மொபட்டில் திரும்பி வந்தனர். தியாகு மொபட்டை ஒட்டிசென்றார். பொட்டனேரி அருகே வந்தபோது மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பஸ் மொபட் மீது மோதியது. இதில் ரஜினி குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தியாகு படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவலறிந்து வந்த மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி