கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு நிதி உதவி

கோவை மாவட்டம் சூலூரில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் குடும்பத்தினரை அமைச்சர் சம்பத்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூரில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு நேரில் வந்த அமைச்சர், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தற்காலிக நிதியுதவி வழங்கினார். சூலூரில் சிறுமிக்கு நடந்த கொடூரம் அதிர்ச்சியையும், மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது என்றும், இந்த விவகாரத்தில் மக்கள் நம்பிக்கைக்கு ஏற்ப அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

✕
✕