நெற்றியில் நாமத்துடன் பிறந்த பசுவை தானம் கொடுத்த பெண் பக்தர்

மேச்சேரி அருகே கைகாட்டி வெள்ளார் வசந்தம் நகரில் உள்ள ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் செயல்பட்டு வரும் கோசாலைக்கு, நெற்றியில் திருநாமத்துடன் பிறந்த பசு ஒன்றை பெண் பக்தர் தானமாக வழங்கியுள்ளார். இந்த கோசாலையில் 10-க்கும் மேற்பட்ட பசுக்கள் உள்ளன. இவற்றின் பால் கொண்டு தினமும் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக பசுக்களை தானமாக வழங்கி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் ராம பக்த ஆஞ்சநேயர் சேவா அறக்கட்டளை நிறுவன தலைவர் உரக்கடை ஆறுமுகம், தலைவர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி