மேச்சேரி வட்டாரம் விவசாயிகள் பதிவு எண் பெற விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்டம் மேச்சேரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஷரீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -
மேச்சேரி வட்டார அளவிலான ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஒவ்வொரு பதிவு எண் வழங்கப்படுகிறது. அதற்காக விவசாயிகள் பதிவு சிறப்பு முகாம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்று வருகிறது. இதில் விவசாயிகள் தங்களை பற்றிய தகவல்களை பதிவு செய்துக்கொண்டு, அடையாள எண் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த அடையாள எண்ணை கொண்டு விவசாயிகள் எதிர்காலத்தில் விவசாயம் சார்ந்த நலஉதவிகளை பெறலாம்.
விவசாயிகள் பொது சேவை மையங்களை பயன்படுத்தி இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான கடைசிநாளாக வருகிற 8-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மேச்சேரி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி