மேட்டூர் மின் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. மின் நுகர்வோர் ஏதேனும் மின் குறைபாடு தொடர்பாக குறைகள் இருந்தால் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மேட்டூர் செயற்பொறியாளர் வனிதா தெரிவித்துள்ளார்.