மேட்டூர் மின்வாரிய கோட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணி அளவில் மேட்டூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மின் நுகர்வோர் தங்களது மின் குறைபாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம் என மேட்டூர் மின்வாரிய செயற்பொறியாளர் வனிதா தெரிவித்துள்ளார்.