பெட்ரோல் பங்க் பெண் ஊழியரை தாக்கிய டிரைவர் கைது

நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜீவ் காந்தியின் மனைவி பிரியா (32), சந்தைப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். மேச்சேரி பிரிவு ரோடு பகுதியைச் சேர்ந்த பரத் (20) மற்றும் செங்காட்டூர்மேடு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (29) ஆகியோர் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப வந்தபோது, மோட்டார் சைக்கிளை அணைக்காமல் பெட்ரோல் நிரப்பும்படி பிரியாவிடம் கூறியுள்ளனர். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், பரத்தும் மகேந்திரனும் பிரியாவைத் தாக்கியுள்ளனர். இது குறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனைக் கைது செய்துள்ளனர். பரத்தைத் போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி