கொளத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான்கள் மீட்பு

சேலம் கொளத்தூர் அருகே கத்திரிப்பட்டி நாயன்பாடி பகுதியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜின் நிலத்தில் உள்ள கிணற்றின் அருகே உணவு தேடி வந்த 8 மான்கள் தவறி விழுந்தன. இதுகுறித்து மேட்டூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மான்கள் மீட்கப்பட்டன. இதில் 4 பெண் மான்களும், 3 ஆண் மான்களும் உயிருடன் மீட்கப்பட்டன. ஒரு ஆண் மான் உயிரிழந்தது. மீட்கப்பட்ட மான்கள் வனப்பகுதியில் விடப்பட்டன.

தொடர்புடைய செய்தி